கட்சி நிலைப்பாடு குறித்து யாரும் பேட்டியளிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து கட்சி தலைமை உரிய நேரத்தில் உரிய முறையில் தெரிவிக்கும் என கூறியுள்ளார்.
ஆகவே, அதிமுக நிர்வாகிகள் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும் தலைமையின் அனுமதி பெறாமல் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் எனவும் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.