மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி விசாலாட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர், இவருக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் நிலம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கருமுத்து டி. சுந்தரத்தை எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 6 ஆம் தேதியன்று சுந்தரத்தை 10க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சுந்தரம் வீடு திரும்பாத நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு கடத்தலில் தொடர்புடையதாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கடத்தப்பட்ட தொழிலதிபர் சுந்தரத்தின் சகோதரி விசாலாட்சி கனடாவில் இருந்தபடி, தனது சகோதரரை மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது சகோதரர் எந்த நிலமையில் இருக்கிறார் என்ற வீடியோவையாவது காவல்துறையினர் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.