நெல்லையில் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய நபரான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கடந்த மார்ச் 18ம் தேதி அதிகாலை தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி, நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், கார்த்திக், அக்பர் ஷா, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த நிலையில், ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.