மூலதனச் சந்தைகள் மீதான இந்தியாவின் பார்வை விரிவடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச் சந்தையின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்திய மூலதனச் சந்தைகள் ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை எனக் கூறினார்.
அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் மூலதனச் சந்தை சிறந்து விளங்குவதாகக் கூறிய அவர், பாலினம், வருவாய் என எந்த பேதமும் இன்றி பொதுமக்கள் அனைவருக்கும் நிதி ஆதாரமளித்து நாட்டின் வளர்ச்சியில் அவர்களும் பங்கெடுக்க வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.