பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், திடீரென கோலிக் குண்டு அளவிற்கு ஆலங்கட்டி மழை பெய்தது.
துப்பாக்கி குண்டுகள் துளைப்பது போல் பயங்கர சத்தத்துடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்தன. இதனால் மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.