காஷ்மீர் குறித்துப் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தனது பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.