பெண்கள் குறித்து அவதூறாக பேசும் அமைச்சர் பொன்முடி சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பேசி வருவதாக கூறினார். பொன்முடி வரும் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் எனக்கூறிய அவர், அமைச்சராக இருக்க பொன்முடி தகுதியற்றவர் என விமர்சித்தார்.