அந்நிய செலாவணி முறைகேட்டில் ஈடுபட்ட வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தமாக ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியினை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 2 வர்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாகக் கூறி மக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கொல்கத்தா போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமாக ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் சொகுசு விடுதி மற்றும் நிலம் என 30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.