விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பார் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காந்திநகர் பகுதியில் தர்மா ரெக்ரேஷன் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இங்கு மது அருந்த வந்த இரண்டு இளைஞர்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த இளைஞர்களின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டது.