2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்
Mar 19, 2026, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்துவிண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியவர்,

இஸ்ரோவில் 2025-ல் நிறையச் சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்-1 நிலை நிறுத்தியிருக்கிறோம் என்றும் அதிலிருந்து நிறைய சயிண்டிக்கல் டேட்டாக்கள் கிடைத்தன. கடந்த ஜனவரி 16-ல் ஸ்பீடேக்ஸ் எனும் இரண்டு செயற்கைக் கோளையும் இணைத்து சாதனை நடந்தது என தெரிவித்தார்.

மார்ச் 13-ம் தேதி மறுபடியும் செப்பரேட் பண்ணி சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனை செய்ததில் இந்தியா 4-வது நாடு ஆகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

சர்க்கன் நேவிகேஷன் என்ற முறையில் ஒரு சேட்டிலைட் சுற்றிக்கொண்டிருக்கும், அதை மற்றொரு செயற்கைகோள் கண்காணித்துக்கொண்டிருக்கும். ஜனவரி 29-ம் தேதி 100-வது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது.

மேலும் 3-வது லாஞ்ச் பேட்  ஸ்ரீஹரிகோட்டாவில் 42 மாதத்தில் அமைக்க  4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் லிக்யூட் ராக்கெட் இன்ஜினில் பெரிய ஹெப்பாசிட் உள்ளது. விகாஷ் இன்ஜின். 80 டன் ட்ரஸ்ட் கொடுக்கும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் எடையுள்ள இன்ஜின் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக மகேந்திரகிரியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சோதனை கூடம் ஒன்றைப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதில் வைத்து புதிதாக டெவலப் செய்த எஞ்சின் பவர் கெட்டை வெற்றிகரமாக செய்திருக்கிறோம்.

இது பெரிய  சாதனையாகும். அதில் சில சோதனைகள் எல்லாம் உள்ளன. அதை முடித்துவிட்டு வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை வைத்து மார்க்-3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டம் இருக்கிறது என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

மார்க் -3 ராக்கெட் 4000 கிலோ எடையுள்ள செயற்கைகோளை செலுத்த முடியும் என்றும் சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வர உள்ளதாகக் கூறியிருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குக் கொண்டுசென்ற மாடிபையில் உள்ள ட்ரஸ்ட் ஹீட் ஆகிவிட்டது. அதே பிரச்சனை கடந்த ஆண்டு நமக்கு மகேந்திரகிரியில் நடந்தது. சுனிதா வில்லியம்ஸ்-க்கு ஏற்பட்ட சிக்கலை நாம் படித்து வருகிறோம்.

வரும் மே மாதம் பி.எஸ்.எல்.வி 61வது ராக்கெட்டை அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை மார்க் -3 மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். மகேந்திரகிரியில் நிறைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முன்பு இஸ்ரோ மட்டுமே இந்திய விண்வெளிக்கான எல்லா வேலைகளையும் செய்துவந்தது. இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, இளைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ராக்கெட் தயாரித்தல், சாப்ட்வேர் உருவாக்குதல் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு சப்போர்ட் செய்து, ஊக்குவிக்குவித்து வருகிறோம்.

கன்னியாகுமரி சன் செட் பாயின் அருகே ஸ்பேஸ் பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளனர். குலசேகரபட்டிணத்தில் 95 சதவிகிதம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்குப் புறப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

Tags: இஸ்ரோ தலைவர் நாராயணன்Rocket to be launched from Kulasekarapattinam within 2 years: ISRO Chairman Narayananராக்கெட்மார்க் -3 ராக்கெட்
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : மதுபான பாரில் இலவசமாக சைடிஸ் கேட்டதால் தகராறு!

Next Post

பஞ்சாப் : ரீல்ஸ் எடுப்பதற்காக சாலையோரம் கவர்ச்சி நடனம்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies