முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
திம்மாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பாஜக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஏ.ஜி.சம்பத், வினோஜ் பி செல்வம், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் பெருங்கோட்டம் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 5 மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்
முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்து விட்டதாக விமர்சித்தவர், காங்கிரஸும், திமுகவும் இயற்கையான கூட்டணியா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவும், பாஜகவும் சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுக கூட்டணி வைத்த போது தமிழ்நாட்டை அடகு வைத்தார்களா? என கேள்வி எழுப்பியவர், மக்கள்தான் தேர்தல் வெற்றியை முடிவு செய்ய முடியும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.