சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தையின் 150வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பரஸ்பர வரி விதிப்பால் சர்வேதச விநியோக சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
துரிதமான கொள்கைகளை வகுத்து சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும் எனக்கூறிய நிதியமைச்சர், வலுவான பொருளாதார அடிப்படையால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.