ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான 405 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
அவை, ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் உள்ள சுமார் 28 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் 377 கோடி ரூபாய் மதிப்புள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முடக்கப்பட்ட தனது நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு 793 கோடி ரூபாய் என்று டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.