கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடு ரோட்டில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
எல்.ஜே.பார்க் பகுதியில் உள்ள பிரதான சாலையில் இளைஞர் ஒருவர் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சமூக ஊடகப்பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் ஓட்டுநராக பணியாற்றி வந்த அந்த இளைஞரை எஸ்.கே. பார்க் போலீசார் கைது செய்தனர்.