காசா போரை முடிவுக்குக் கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் கலீல் அல் ஹயா, அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிக போர் நிறுத்தங்களை இஸ்ரேல் கையில் எடுக்கிறது எனக் கூறியுள்ளார்.
போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே மீதமுள்ள பிணைக்கைதிகள் 59 பேரை விடுவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.