அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.