டெல்லியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து அவர் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்தார்.
அப்போது குடியரசு துணைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.