சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தில், அவரது சமூகப் பணிகளை போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ் நாளேடுகளில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகின்ற ‘தினத்தந்தி’ குழுமத்தின் உரிமையாளர், ‘பத்மஸ்ரீ’ பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும், நாளிதழ்கள் மூலமாக அன்றாட நிகழ்வுகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கின்ற அரும்பணிகளையும் மேற்கொண்டு வாழ்ந்த ‘பத்மஸ்ரீ’ பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தில், அவரது சமூகப் பணிகளை போற்றுவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.