கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் அருகே சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானாவின் இந்துப்பூரில் இருந்து ஷாபூரில் நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு சரக்கு வாகனத்தில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அமரபுரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.