தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக நிதியை கொண்டு வர மாநில பாஜக துணையாக இருக்கும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என கூறிய அவர், மக்களின் மனநிலையை மடைமாற்றம் செய்ய திமுக தேவையற்ற தீர்மானங்களை போடுவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.