டெல்லியில் ராணுவ வீரர்களுக்கான மாரத்தான் போட்டியை முன்னாள் ராணுவ தளபதியும், மிசோரம் ஆளுநருமான வி.கே.சிங் மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை மைதானத்தில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
3 பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.