ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரமாக உள்ளதாக தெரிவித்தார்.
அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என்றும் அவர் பதில் அளித்தார். பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்வதற்கான அடுத்தடுத்த திட்டங்களை அறநிலையத்துறை ஆய்வு செய்ய வேண்டும் எனறும் நயினார் நாகேந்திரன் கூறினார். பின்னர் திண்டுக்கல்லில் நடைபெறும் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.