நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த காந்தி செல்வன் தான் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வை முன்மொழிந்து பேசியதாக தெரிவித்தார்.
திமுக கூட்டணி ஆட்சியின்போது தான் முதல் நீட்தேர்வு நடைபெற்றதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதாகவும் கூறினார்.
நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு செய்யாமல் ஸ்டாலின் நாடகமாடுவதாகவும் ஹெச்.ராஜா சாடினார். நாள்தோறும் பொய் பேசும் முதல்வரை பொதுமக்கள் எப்படி நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.