விஞ்ஞான நூற்றாண்டில் நல்ல குடிநீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியில் உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விஞ்ஞான நூற்றாண்டில் கூட நல்ல குடி நீரை கொடுக்க ஸ்டாலின் அரசால் முடியவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது என்றும் கூறினார்.
திமுக ஆளுநரை போஸ்ட் மேன் என கூறுவதாக தெரிவித்த தமிழிசை, பின்னர் எதிர்கட்சியாக இருக்கும் போது எதற்காக கோரிக்கைகளை கொடுக்க ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள் என்றும் தெரிவித்தார்.