திருவண்ணாமலை அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை அக்கட்சியின் பேச்சாளர் அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
போளூர் அடுத்த படவேடு பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பேச்சாளர் தமிழன் பிரசன்னா மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஆயிரம் ரூபாயால் ஒரு சின்ன மூக்குத்தி கூட வாங்க முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழன் பிரசன்னா மூதாட்டியின் விவரங்களை கேட்டு அச்சுறுத்தும் வகையில் பேசினார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.