கருத்து சுதந்திரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் தமிழ்நாட்டில் இந்த வருடம் பத்ம விருது பெற உள்ளவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், தமிழக அரசை நோக்கி தூர்தர்ஷன் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை என தெரிவித்தார். மத்திய அரசு தான் கருத்து சுதந்திரத்திற்கு முழுமையான இடத்தை கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சேனலின் பெயரில் தமிழ் இடம்பெற வேண்டும் என்பதற்காக பொதிகை என்ற பெயரை டிடி தமிழ் என மாற்றியதாகவும், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் ‘பத்மவிபூஷண்’ டாக்டர் பத்மா சுப்பிரமணியம் , ‘பத்மபூஷன்’ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள், திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா , டிடி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சதீஷ் நம்பூதிரிபாத், திரைப்பட நடன இயக்குனர் திருமதி. கலா மாஸ்டர் , டிடி தமிழ் தொலைக்காட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்,