வேலூர் காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பகுதிகள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என உரிமை கோரப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு விரிஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள மசூதி, தர்கா சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காட்டுக்கொல்லை பகுதி மக்களுடன் இந்து முன்னிணி அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள 12 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்து முன்னணியினர் உதவியுள்ளனர். காட்டுக்கொல்லை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இந்து முன்னணி நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.