இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இன்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, 4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரது மனைவியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷாவும் உடன் வருகிறார்.
முதலில் சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் ஜே.டி.வான்ஸ், பின்னர் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகத்தை பார்வையிடுகிறார். மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனை அடுத்து, ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.