கோவில் கிணறு மயானம் பொதுவாக இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமூகத்தின் அடித்தளமான மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தார்மீக கொள்கைகளில் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், கோவில் கிணறு மயானம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை இந்துகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சந்தித்து தங்கள் வீடுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை அவர்களிடம் பரப்ப வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், தேசியவாதம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடித்தளங்களை வலுப்படுத்த பண்டிகைகளை கூட்டாக கொண்டாடுமாறும் மோகன் பகவத் அறிவுறுத்தினார்.