டெல்லியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகளை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்.
தலைநகர் டெல்லியில் பொதுமக்களின் வசதிக்காக அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா ஆயிரத்து 111 டேங்கர் லாரிகளைப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.
குடிநீர் வழங்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், டெல்லியில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் மக்களின் பிரச்னைகளை மட்டுமே சிந்திப்பதாகக் கூறினார்.
அவர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை வழங்கக் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய இந்த டேங்கர் லாரிகளைக் கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.