மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே கிணற்றுக்குள் இறங்கி பெண்கள் தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் இதேப்போல் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில், நீர் நிலைகள் வறண்டு நாசிக்கில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாகப் போரிச்சிவாரி கிராமத்தில் பெண்கள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் அவநிலை ஏற்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்க கூடுமென வானிலை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.