தனது மகனின் திருமண வாழ்க்கை குறித்து அவதூறான செய்தி பரப்பப்படுவதாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும், நெல்லையைச் சேர்ந்த அக்சயா என்பவருக்கும் கடந்தாண்டு ஜப்பானில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இவர்களின் வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக நெப்போலியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், சமூக விரோதிகள் வேண்டுமென்றே அவதூறு செய்திகளைப் பரப்பி வருவதாகவும், இந்தச் செய்திகளால் குடும்ப உறுப்பினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்டு அவதூறு பரப்பும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.