சென்னை வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணலி பகுதியைச் சேர்ந்த தொண்டை ராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளி வந்த தொண்டை ராஜ் ஈஸ்டர் வியாசர்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தொண்டை ராஜை வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பி சென்றனர். இது குறித்த வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.