கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர், எரியும் பனை ஓலைகளை வீசி வழிபாடு நடத்தினர்.
இக்கோயிலின் தேர்த்திருவிழா கடந்த வாரம் தொடங்கிய நிலையில், நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எரியும் பனை ஓலைகளை வீசும் நிகழ்வு நடைபெற்றது. கோயில் முன்பு கூடிய ஆண் பக்தர்கள் எரியும் பனை ஓலைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி வழிபாடு நடத்தினர்.