சாட்ஜிபிடியிடம் ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளைச் சேர்த்து கேள்வி கேட்பதால் கோடிக்கணக்கில் பணம் செலவாகிறது என அந்நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
நெட்டிசன் ஒருவர் ஏஐ மாடல்களில் ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவோரால் எவ்வளவு பணத்தை மின்சாரத்திற்குக் கூடுதலாகச் செலவிடுகிறீர்கள் எனக் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சாம் ஆல்ட்மேன், நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குச் செலவிடுவதாகவும், அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.