2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பிஒய்டி நிறுவனம் உலகளவில் 9,90,711 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் விற்பனையை விட 58.7% அதிகமாகும். அதிலும், குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் பிஒய்டி நிறுவனம் 3,77,420 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பிஒய்டி நிறுவனம் அதன் இன்டெர்னல் கம்பஸ்டன் இஞ்சின்களைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தியது.
இப்போது பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவற்றை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது.