நெசவாளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை, திருப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வந்த விசைத்தறி உரிமையாளர்கள், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விசைத்தறியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற செய்தி நிம்மதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் வாரக்கணக்கில் போராடியும் அதனைக் கண்டுகொள்ளாமல் அரசு காலம் தாழ்த்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தொடக்கத்திலேயே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைப் புறக்கணிக்கும் விதமாகவே தமிழக அரசு தொடர்ச்சியாக நடந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன்,
நெசவாளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.