திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மகத்தான அடையாளம் என தவத்திரு பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவும் விழா மற்றும் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், திருவள்ளுவர் சிலை என்பது தமிழ்ப் பண்பாட்டின் ஒட்டுமொத்த அடையாளம் எனத் தெரிவித்தார்.