வேலூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பெண் வீட்டார் தாக்க முயன்றனர்.
கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஜனனி பிரியா என்பவரைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதுமண ஜோடி தஞ்சம் புகுந்தனர்.
தகவலறிந்து எஸ்.பி. அலுவலகத்திற்குச் சென்ற பெண் வீட்டார், இருவரையும் தாக்க முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், இரு வீட்டாரிடமும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.