வேலூர் அருகே நெஞ்சுவலி ஏற்பட்ட மாற்றுத்திறனாளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்குச் செல்லாத வகையில் பல மாற்றுத்திறனாளிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க துணைத் தலைவர் கோபால ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, கோபால ராஜேந்திரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.