திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தர்பூசணி பழங்களைச் சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தர்பூசணி பழத்தைப் பற்றிய உணவுத்துறை அதிகாரிகளின் தவறான பிரச்சாரத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் முன்பு விவசாயிகள் தர்பூசணி பழத்தைச் சாலையில் போட்டு உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.