எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் சூழலில், தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு நயினார் நாகேந்திரன் வருகை தந்தார்.
அங்கு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மரியாதை நிமித்தமாக இபிஎஸ்-ஐ சந்தித்ததாகத் தெரிவித்தார்.