அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையைக் கண்டு ரசித்தார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட அவர், அங்கிருந்து ஜெயப்பூர் சென்றார்.
அங்குள்ள ஆம்பர் கோட்டையில் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் கோட்டையைச் சுற்றிப் பார்த்தார்.