திருவிழாக்களின் திருவிழா - மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு!
Oct 27, 2025, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவிழாக்களின் திருவிழா – மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை என்றால், சித்திரைத் திருவிழாவைத் திருவிழாக்களின் திருவிழா என்றுதான் அழைக்க வேண்டும். உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிறப்பு பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை சித்திரைத் திருவிழா- சாதி, இனம், மொழி, மதம் கடந்து எல்லாத் தரப்பு மக்களும் மீனாட்சியின் பக்தர்களாகக் கலந்துகொள்ளும் ஒரு  பண்பாட்டுப் பண்டிகையாகும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் ஆண்டில் 280 நாட்களுக்கும் மேலாகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் மகுடம் வைத்தது போல நடக்கும் திருவிழா தான் சித்திரைத் திருவிழா.

சித்திரைத் தேரோட்டத்தையும் , கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் காண லட்சக் கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் கூடுகிறார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக சிறப்பு வாய்ந்ததாக  சித்திரைத் திருவிழா அமைந்திருக்கிறது.

ஒருகாலத்தில், மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத் தன்றும் ,மீனாட்சி பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடைபெற்று வந்தன . சைவர்கள் மீனாட்சி திருக்கல்யாணத்தை விமர்சையாக கொண்டாடி வந்தார்கள்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதம் நடைபெற்று வந்தது. கள்ளழகர் சோழவந்தான் அருகில் தேனூர் என்ற இடத்தில் தான்  முதலில் ஆற்றில் இறங்கினார்.  வைணவர்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தைக் கொண்டாடி வந்தனர்.

வைணவராக இருந்தாலும் மதுரை மீனாட்சியம்மன் மீது பேரன்பு கொண்ட திருமலைநாயக்கர் ஆட்சிக் காலத்தில், வைகையாற்றில் இறங்கிக் கொண்டிருந்த கள்ளழகரையும், மாசியில் மதுரையில் நடைபெற்ற திருக்கல்யாணத்தையும் ஒருங்கிணைத்து சித்திரை மாதம் ஒரே திருவிழாவாகக் கொண்டாடும் நடைமுறையைக் கொண்டுவந்தார்.

சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்துக்குச் சென்று வந்து கொண்டிருந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை , மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி திருமலை நாயக்கர் மாற்றியமைத்தார்.

வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்குப் பெருமாள்  சாப விமோஷனம் கொடுத்தார் என்பது வரலாறு. எனவே இன்றும், மண்டூக முனிவர் சாப விமோசனம் நடைபெறும் மண்டபத்தின் பெயர் ‘தேனூர் மண்டபம்’ எனப்படுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், மீனாட்சி பட்டாபிஷேகம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், தசாவதாரம், பூப்பல்லக்கு என ஒட்டு மொத்த தூங்கா மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அழகே அழகு.

பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மீனாட்சி, தான் முடிசூடிய பிறகு திக் விஜயம் மேற்கொண்டு நகருக்குள் பவனி வருவது திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வாகும்.

மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது. பாண்டியர்களின் குலதெய்வம்  மீனாட்சி என்பதால், மதுரையின் அரசியாக 8ம் நாளில் முடிசூடி பாண்டியர்களின் சின்னமாக இருக்கக்கூடிய வேப்பம்பூ மாலையைத் சூடிக் கொண்டு உலா வருவது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுச் சின்னமாக உள்ளது.

தன் தங்கை மீனாட்சியின் திருமணத்துக்காகச்  சீர்வரிசைகளுடன், அழகர் கோயிலிலிருந்து மதுரை நோக்கி  அழகர் கோயில் பெருமாள் கிளம்புகிறார்.

ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, வித்தியாசமான கொண்டை, தலையில் உருமால், கல்வைத்த கடுக்கன் எனக் கண்ணுக்கு அழகாகப் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

மேலும், காங்கு எனப்படும் கருப்பு புடவையே  கணுக்கால் தொடங்கி இடுப்பு வரை அரையாடையாகவும், அதுவே மேலாடையாகவும் சுற்றப்பட்டிருக்கும் இந்த கோலத்தையே கள்ளழகர் திருக்கோலம் ஆகும்.

கள்ளழகர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபம் கொண்டு, வைகையாற்றில் இறங்கிக் குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார். அன்றிரவு அங்குள்ள பெருமாள் கோயிலில் கள்ளழகர்  தங்குகிறார்.

மதுரை மீனாட்சி அம்மை வரலாறே அற்புதமானது.மதுரையை ஆண்டு வந்த மலையத் துவச மன்னனும் அவரது மனைவி காஞ்சன மாலையும் மகப்பேறு வேண்டி, சிவபெருமானை வழிபட்டு வந்தனர். பிரம்மாவின் அறிவுரைப் படி, இறைவனை நோக்கி, வேள்வி செய்தனர். உண்மையான அடியார்களுக்கு அருளும் உமையம்மை, 3 தனங்களை உடைய பெண் குழந்தையாக யாக குண்டத்தில் தோன்றினாள்.

குழந்தை வந்ததைக் கண்டு மகிழ்ந்த  மன்னனும் அவர் மனைவியும் , குழந்தையின் உருவம் கண்டு மனம் வருந்தினர். இக்குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வா என்றும், தனக்கேற்ற கணவனை இக்குழந்தை காணும் போது மிகுதியாக இருக்கும் தனம் மறைந்து விடும் என்றும்  சிவபெருமான் அசரீரியாகக் கூறினார்.

கல்வி கேள்விகளில் சிறந்து வீரம் மிக்கவளாக விளங்கிய தடாதகை பாண்டி நாட்டின் அரசியானாள் செங்கோல் வழுவாமல் அரசாண்டு வந்தாள். நாட்டை விரிவுபடுத்த எண்ணி, படையோடு கிளம்பினாள். பல குறுநில மன்னர்களின் மீது போர் தொடுத்து வென்ற தடாதகை , கயிலைய மலையை அடைந்து போர் தொடுத்தாள். தடாதகையை எதிர்த்த நந்தி தேவர் படைகளும் பூதப் படைகளும் தோல்வி அடைந்தன.

சிவபெருமானே போர் கோலம் பூண்டு வந்தான். ஈசனைக் கண்டதும், நாணித் தலைகுனிந்தாள் தடாதகை . அவளின் மூன்று தனங்களில் ஒரு தனம் மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்று தடாதகை  அறிந்தாள்.

நீ மதுரைக்குச் செல், இன்றிலிருந்து எட்டாம் நாள், மதுரைக்கு வந்து உன்னை மணம் புரிவோம் என்று ஈசன் அருளினான். அதே போல் , சிவபெருமான் மதுரைக்கு வந்து ஒரு பங்குனி உத்தர நாளில் தடாதகையைத் திருமணம் செய்தருளினார்.  சுந்தர பாண்டியன் என்ற பெயரோடு மதுரையை ஆண்டு வந்த இறைவன், உக்கிரா குமார பாண்டியனுக்கு முடி சூட்டி விட்டு , மீனாட்சி சுந்தரேஸ்வரராக எழுந்தருளி இன்றும் நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள்.

மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் ஆனதாகும். திருக்கோயில் கருவறை தேவேந்திரனால் அமைக்கப்பட்டதாகும். பிறகு  முழுக்கோயிலும் குலசேகர பாண்டியனால் கட்டப் பட்டதாகும். மீனாட்சி அம்மனுக்குப் பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு இக்கோயிலில், சுந்தரேஸ்வரருக்குப் பூஜைகள்  நடத்தப்படுகிறது.

சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தொடரும் தமிழ்ச் சமய பண்பாட்டின் அடையாளமாக நடக்கும் சித்திரைத் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இப்போது, பக்தியில் பரவசமாகத் தயாராகி விட்டனர் பக்தர்கள்.

Tags: சித்திரைத் திருவிழாThe festival of festivals - the Madurai Chithirai Festivalமதுரை சித்திரைத் திருவிழா
ShareTweetSendShare
Previous Post

சீனாவிற்கு வரி விதிப்பு எதிரொலி : இந்தியாவுக்கு மாறும் ஐ போன் உற்பத்தி!

Next Post

அஜித்குமார்,பாலகிருஷ்ணா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் – குடியரசுத்தலைவர் வழங்கி கௌரவம்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies