சீனாவிற்கு வரி விதிப்பு எதிரொலி : இந்தியாவுக்கு மாறும் ஐ போன் உற்பத்தி!
Sep 6, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவிற்கு வரி விதிப்பு எதிரொலி : இந்தியாவுக்கு மாறும் ஐ போன் உற்பத்தி!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை மட்டுமே அமெரிக்காவில் விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன்களை சீனாவில் தயாரித்து உலகமெங்கும் விற்பனை செய்து வருகிறது.

ஓராண்டுக்கு  23.21 கோடி ஐபோன்கள் விற்பனை ஆகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 6.5 கோடி ஐபோன்கள் விற்பனை செய்யப் படுகிறது. இது மொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதமாகும்.

சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தான் ஆப்பிள் நிறுவனம், அதிக அளவில் ஐபோன்களை தயாரித்து வருகிறது.

2020 ஆம் ஆண்டில், பிரதமர் மோடியின்   தற்சார்புடைய இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை என்ற  திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம்,  நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக  14 முக்கிய துறைகளில், இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனமும், தனது ஐபோன் உற்பத்தியை, சீனாவில் இருந்து இந்தியாவுக்குக் கொஞ்சம்  மாற்றியது.   ‘ஐபோன்’களை தயாரிப்பதற்காக இந்தியாவில்  (Foxconn) பாக்ஸ்கான், (Pegatron) பெகட்ரான்,  (Wistron) விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.  இந்த நிறுவனங்களே இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன.

2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று ஆண்டுகளில், PLI திட்டத்தில், கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்களை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது. இதில், 75 சதவீதத்துக்கும் அதிகமான மானிய நிதியை, ஐபோன் உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளனர்.

2022-23 மற்றும் 2024-25 ஆகிய மூன்று ஆண்டுகளில் மொத்தம் 6,600 கோடி ரூபாயை பாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

இந்தச் சூழலில், அமெரிக்காவுக்குச் சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 145 சதவீத வரி விதித்த ட்ரம்ப்    ஐபோன்களுக்கு மட்டும் பரஸ்பர வரியில் இருந்து விலக்களித்தார். ஆனாலும், சீனா ஏற்றுமதி செய்யும் மின்னணு சாதனங்கள் மீது  20 சதவீத அடிப்படை வரி  தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனால்,  அமெரிக்காவில் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கெனவே, நடப்பு ஆண்டில், கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  உலகின் இரண்டாவது பெரிய ஐபோன் உற்பத்தி மையமாக இருக்கும் இந்தியா, விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Imposition of tariffs on China: iPhone production to shift to Indiaஇந்தியாவுக்கு மாறும் ஐ போன்ஐ போன் உற்பத்தி
Share
Tweet
SendShare
Previous Post

தொடர்ந்து விஷம பரப்புரை : இந்து வெறுப்பை விதைக்கும் மேற்கத்திய ஊடகங்கள்!

Next Post

திருவிழாக்களின் திருவிழா – மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies