உதகையில் நடைபெறவுள்ள வருடாந்திர துணைவேந்தர்களின் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு உதகையில் ஏப்ரல் 25, 26ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைப்பார் என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்குமாறு மாநிலத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,
வளர்ந்து வரும் கல்வியில், உயர்கல்விக்கான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து மாநாட்டில் ஆராயப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்களின் நிதி மேலாண்மை, தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.