விளையாட்டு பல்கலைக் கழகத்தில் மாணவியைக் கர்ப்பமாக்கி கருக்கலைப்பில் ஈடுபட்ட உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியிடம் உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 18ஆம் தேதி படூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கருக்கலைப்பு செய்வதற்காக மாணவியை அழைத்துச் சென்றிருந்தார்.
மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்தபோது சுயநினைவை இழந்ததால், மருத்துவர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.