குஜராத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
அம்ரேலி பகுதியில் விமான பயிற்சி அகாடமிக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
மரத்தின் மீது மோதி விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தை இயக்கிய பயிற்சி விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.