மகாராஷ்டிராவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நாசிக் மாவட்டத்தில் உள்ள தோண்டுவால் கிராமத்தில் கடும் வெப்ப அலை கடந்த சில வாரங்களாக நிலவி வருகிறது.
இதன் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தண்ணீரின்றி அல்லல்படும் பெண்கள், கிணற்றில் உள்ள சொற்ப நீரை கேன்கள் மூலம் கயிறு கட்டி எடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.