திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் திமுக அரசைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.